2025 மே 03, சனிக்கிழமை

1,500 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது

Niroshini   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியில், இன்று (29) காலை, ஒரு தொகை மஞ்சள் பொதிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

பாசையூர் பகுதியைச் சேர்ந்த 32, 64 வயது நிரம்பிய இருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து,  1,500 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு, இந்த இவை கடத்திவரபட்டன என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டப் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த மஞ்சள் மூடைகள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகஇ பொலிஸார்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X