Editorial / 2020 மே 18 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாண மாவட்டத்தில் வதியும் 1 இலட்சத்து 35 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு, முதல்கட்டமாக 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மாவட்டச் சமுர்த்தி முகாமையாளர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்ளும், 76 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 11 ஆயிரம் குடும்பத்தினர் உட்பட 1 இலட்சத்து 35 ஆயிரத்துக்கு 113 குடும்பங்களுக்கே, முதலாவது கட்டமாக 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதென்றார்
இந்நிலையில், முதலாவது கட்ட 5,000 ரூபாய் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது கட்ட நிதியை வழங்கும் செயற்பாடுகள், இன்றைய தினம் (18) பிரதேச செயலகங்கள் ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, மகேஸ்வரன் கூறினார்.
39 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
45 minute ago
2 hours ago