2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

10 பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிறிய ரக வாகனத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வி.பிரபோத என்னும் வியாபாரி தனது சொந்த நிதியிலிருந்து யாழில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 10 பள்ளி மாணவர்களுக்கு தலா 1000 ரூபா வங்கியில் வைப்பிலிட்டு வங்கி புத்தகங்களை வழங்கியுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கே.வி.குகேந்திரன் ஊடாக யாழ்.பிரதேச அபிவிருத்தி வங்கியில் வைப்புச் செய்து அப்புத்தகங்களை மாணவர்களிடம் வியாழக்கிழமை (06) வழங்கினார்.

அத்துடன், அந்த மாணவர்களின் சேமிப்புப் புத்தகத்தில் மாதாந்தம் 200 ரூபா பணம் வைப்பிலிடுவதாகவும் அந்த வியாபாரி இதன்போது தெரிவித்திருந்தார்.

இந்த புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில், யாழ்.பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதி முகாமையாளர் எஸ்.சுரேஸ், வங்கி நிர்வாக உத்தியோகத்தர்களான திருமதி.விஜிதா சுதர்சன், எஸ்.கற்சலா, எஸ்.எம்.ஜனனி ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .