Editorial / 2018 மே 05 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
தமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து, சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர், காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, இன்று (05) அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.
அவர்களில், வாடைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக, கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைகள் மற்றும் மலேரியா தடுப்பு பரிசோதனையின் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸாரின் விசாரணையின் பின்னர் 10 பேரும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படுவர்.
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago