2024 மே 18, சனிக்கிழமை

“10 வீத கழிவை கைது செய்க”

Freelancer   / 2023 ஒக்டோபர் 16 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 சதவீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர்,  பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரினால், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை செயற்படுத்தப்படுகின்றமை தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை )15)  இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்பாக திருநெல்வேலி, மருதனார் மடம், சாவகச்சேரி, கொடிகாமம் சந்தைகளில் இந்த விவசாயிகளிடம் கழிவு அறவிடும் நடைமுறை இடம்பெற்று வருகின்றது. குறித்த சந்தைகளில் விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டு அவர்களிடம் இந்த கழிவு அறவிடப்படுகின்றது எனவே விவசாயிகள் இது தொடர்பில் முறைபாட்டினை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவார்கள். எனவே பொதுவான தீர்மானமாக பொதுவான முறைப்பாடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 10 சதவீத கழிவு அறவிடும் நடை முறையினை நிறுத்த கோரிய முறைப்பாட்டினை முன் வைக்கின்றோம். எனவே உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பணித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .