2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

1000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்ட ஆரம்ப பணிகள் தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)


கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 1000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், யாழ். மாவட்டத்தில் தெரிவாகிய 61 பாடசாலைகளும் எதிர்வம் 3ஆம் திகதிக்குள் அதன் ஆரம்பகட்ட அபிவிருத்தி வேலைகளை சீர்திருத்த வேண்டுமென யாழ். மாவட்ட திட்டப் பணிப்பாளர் திருமதி.மோகனேஸ்வரன் தெரிவித்தார்.

5000 ஆரம்ப பாடசாலைகள் மற்றும் 1000 இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில்  தெரிவாகியுள்ள 61 பாடசாலைகளின்  வேலைத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 3.05 மில்லியன் ரூபா நிதியில் ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட திட்டப்பணிப்பாளர் மோகனேஸ்வரன் கூறினார்.

அந்நிதியில், ஒவ்வொரு பாடசாலைகளின் ஆரம்ப கட்ட வேலைத்திட்டத்திற்காக கடந்த 3ஆம் திகதி 1 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்ட நிலையில், பாடசாலைகளின் ஆரம்பகட்ட அபிவிருத்தி வேலைகளை சீர்த்திருத்துமாறு அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X