2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

1000 கோடி நஷ்டஈடு வழக்கு மே 28க்கு ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2013 மார்ச் 15 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

1000 கோடி நஷ்டஈடு கோரி உதயன் பத்திரிகைக்கு எதிராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தனக்கும் தனது கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான செய்தி வெளியிடப்பட்டதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக 1000 கோடி வழங்க வேண்டு எனக்கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் எதிராளிகளினால் நீதிமன்றில் வழக்கு வினாக்கள் தாக்கல் செய்யப்பட்டதனால், யாழ். மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் க.சிவகுமார் வழக்கினை மே 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

வழக்கு தொடுநர் சார்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் ஆலோசகரும், சட்டத்தரணியுமான தேவராஜ் மற்றும் சட்டத்தரணி அப்துல் நஷீம் மற்றும் சட்டத்தரணி செலஸ்ரின் சனிஸ்லஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X