2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

113 கிலோ கஞ்சா மீட்பு

Editorial   / 2018 ஜனவரி 24 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜிதா

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியூடாக இந்தியாவில் இருந்து, இலங்கைக்கு கடத்தப்பட்ட 113 கிலோ கிராம் கஞ்சா நேற்று (23) இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் நேற்று (23) இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கு இடமான முறையில் காணப்பட்ட பொதி ஒன்றை மீட்டுள்ளனர்.

கடல் நீர் உள்ளே செல்லாதவாறு மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்ட குறித்த பொதியினுள், சுமார் 11.6 மில்லியன் ரூபாய்  பெறுமதியான கஞ்சா போதை பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளவாலை மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்பு பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளமையால், வடமராட்சி கிழக்கு பகுதியூடாக கஞ்சா கடத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்படையினர், கஞ்சாவை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .