எம். றொசாந்த் / 2019 ஜனவரி 30 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.பொன்னாலை பகுதியில் 12 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்று (29) இரவு கஞ்சாவை மீட்டதாகவும், அதனை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்த மாதகலை சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .