2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

12 மணிநேரம் நீந்தி கரையை அடைந்த இந்திய மீனவர்

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படையினரின் படகில் மோதி கடலில் வீழ்ந்த இந்திய மீனவர்கள் இருவர், நீந்தி, நயினாதீவுக் கரைசேர்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

இந்தியாவின் புதுக்கோட்டையை சேர்ந்த ஐவர் பயணித்த படகு மீது கடற்படையின் டோறா மோதியதில், கடலில் இருவர் வீழ்ந்துள்ளனர்.படகில் இருந்தவர்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்த போதும் அவர்களை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், கடலில் வீழ்ந்த 21, 25 வயதுடைய இரண்டு பேரும் கரையை நோக்கி நீந்தியுள்ளனர்.

அவ்வாறு நீந்தியவர்களில் ஒருவர், சுமார் 4 மணிநேரம் நீந்தி, நயினாதீவுக் கரையை அடைந்துள்ளபோதும் மற்றையர் 12 மணிநேரம் நீந்திய நிலையில், உள்ளூர் மீனவர்களின் படகில் உதவிகோரி கரை சேர்ந்துள்ளார்.

இவர்கள் இருவரையும் தேடிய படகு, சக மீனவர்களைக் காணாது, நேற்று அதிகாலைவேளை நெடுந்தீவுக் கடற்கரையை வந்தடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .