2025 மே 13, செவ்வாய்க்கிழமை

124 கி.கி கேரளா கஞ்சா மீட்பு; இருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

வட்டுக்கோட்டை நேற்று  (12) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 124 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்

சுழிபுரம் மேற்கு பகுதியில் ஓட்டோவில் கஞ்சா மூடைகளை ஏற்றிக் கொண்டு சென்ற போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சுழிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமெனவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X