Editorial / 2022 ஜனவரி 04 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
இந்திய மீனவர்கள் 13 பேரில் விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
இந்த விளக்கமறியல் உத்தரவை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன், இன்று (4) பிறப்பித்தார்.
மீனவர்களிடம் வாக்குமூல பதிவு பெறுவதற்கும், கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் அனுமதி வழங்கினார்.
இலங்கை கடற்பரப்புக்குள் டிசெம்பர் 21 ஆம் திகதி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் மேற்படி13 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன.
மேற்படி மீனவர்களுக்கு எதிரான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாக இன்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago