Freelancer / 2021 டிசெம்பர் 17 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயுதங்கள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் 15 வருடங்களின் பின்னர் விடுதலையாகியுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிரபராதியென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்.
கோண்டாவிலைச் சேர்ந்த 45 வயது தேவராசா சிவபாலன் என்பவரே இவ்வாறு விடுதலையாகியுள்ளார்.
இவர் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பு, வத்தளையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின், 2008ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், மேல் நீதிமன்றத்தால் இவர் குற்றவாளி இல்லையென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025