2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

19 வயது யுவதியுடன் காதல்; 54 வயது குடும்பஸ்தர் மரணம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு கூறினர். 

இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்றைய தினம் (07) ஊருக்கு வந்தவேளை மக்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பி வைத்தவேளை, அவரது உயிர் இடைவழியில் பிரிந்தது.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெகதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X