2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

‘1983இல் நடந்தது இனத்துக்கு எதிரான வன்முறை’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

1983ஆம் ஆண்டில், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், இனக்கலவரம் இல்லையெனவும், அவை, இனத்துக்கு எதிரான வன்முறை எனவும், அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேற்று (07) குறிப்பிட்டார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தினார்.

 

“நாவலர் கோட்டம்” மாதிரிக் கிராமத்தை வழங்கும் நிகழ்விலேயே, இக்கருத்தை அமைச்சர் சஜித் வெளிப்படுத்தினாரென, சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டார்.

அங்கு கருத்துத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, “அமைச்சருடன் நாங்கள், இங்கு பேசி நடந்து வருகின்றபோது, ‘1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம், அது இனக்கலவரம்’ என்று ஒருவர் கூறினார். அதன் போது அமைச்சர் உடனடியாகவே, ‘1983ஆம் ஆண்டு நடந்ததை, இனக்கலவரம் என்று நான் ஒரு போதும் சொல்லுவதில்லை. அது, இனத்துக்கு எதிரான வன்முறை. அதனால், நாங்கள் எல்லோரும் வெட்கப்படுகின்றோம்’ என்று சொன்னார்” என்று குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட 1983ஆம் ஆண்டு, இலங்கையின் பிரதமராக, அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸவே பதவியில் இருந்தார் என்பதோடு, அவ்வன்முறைகள், அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் இடம்பெற்றன என்றே குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .