2025 மே 17, சனிக்கிழமை

20 வருடங்களின் பின்னர் தேசிய மின்சார வலையமைப்புடன் யாழ் குடாநாடு இணைப்பு

Super User   / 2012 பெப்ரவரி 07 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பரந்தனுக்கும் பளைக்கும் இடையில் புதிய மின் விநியோகத் தொகுதியை அமைத்ததன் மூலம்இருபது வருடங்களின் பின்னர் தேசிய மின்சார வலையமைப்புடன் யாழ் குடாநாடு திங்கட்கிழமை முதல்  திங்கட்கிழமை மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.ஷ

மேற்பர பரந்தன் - பளை மின்விநியோக தொகுதியின் மூலம் மாத்திரம் சுமார் 1000 குடும்பங்கள் நன்மையடையும் என அவர் கூறினார்.

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நடைபெற்ற வைபவங்களில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அடுத்த வருடம்  யாழ்ப்பாணத்தில் 25 மெகாவாற் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலையம் அமைக்கப்படும் எனக் கூறினார்.  மன்னார் 100 மெகாவாற் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படும் எனவும் அவர்தெரிவித்தார்.

வவுனியா- கிளிநொச்சிக்கு இடையிலான உயர் அழுத்த மின்சாரம் விநியோகம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படுமு; எனவும் அப்போது முல்லைத்தீவுக்கும் உயர் அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதேவேளை யாழ் வீரசிங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வடமாகாண சபை ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தமிழிலும் உரையாற்றினார்.

"வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்; என்பதை தெரிவித்துக் கொள்;கிறேன். மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். கடந்த யுத்தகாலத்தில் சிறப்பாக பணியாற்றிய மின்சார சபை ஊழியர்களை நன்றியோடு நினைவுகூருகிறேன்.

யாழ்ப்பாணத்து மக்களுக்கு சிறந்த ஒரு மின்சேவையை பெற்றுக் கொடுத்துள்ளோம் என்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டுள்ளது.  மின்சார சபை ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்'" என அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .