Kogilavani / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.நவீன சந்தைப் பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் வைத்து ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட இருவரை இன்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
புத்தளம், யாழ். கொட்டடிப்பகுதியைச் சேர்ந்த இருவரே யாழ்.நவீன சந்தைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, இவர்களிடமிருந்து 20 பைக்கற்றுக்கள் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்களை நாளை மறுதினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மேலும் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025