2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

20 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை காப்பாற்றியவர் இயற்கை எய்தினார்

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 01 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் இயற்கை எய்தியுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் மீது ரெலோ அமைப்பினர் கடந்த 1984 தாக்குதல் நடத்தினார்கள். அதன் போது அங்கு கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை, பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த 20 பெரும்பான்மையின பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பொலிஸ் நிலையத்தின் பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று, அங்கிருந்து  காட்டு பாதையூடாக அழைத்து சென்று பின்னர் வான் ஒன்றில் ஏற்றி சென்று ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.

பருத்தித்துறையை சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 1944ஆம் ஆண்டு பிறந்தார். அவர் 1962 ஆம் ஆண்டு தனது 18 வயதில் பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிளாக இணைந்து கொண்டுள்ளார். பின்னர் பொலிஸ் சேவையில் சார்ஜென்ட் தரத்துக்கு உயர்ந்தவர் 1989ஆம் ஆண்டு தனது 45ஆவது வயதில் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். இந்நிலையில், தனது 75 வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

அவரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி பூரண பொலிஸ் மரியாதையுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X