A.P.Mathan / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நண்பகல் பெய்த கடும் மழையினால் தாழ்ந்த இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்பட்டது. இன்று பெய்த கடும் மழையினால் யாழ். நகரின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பெய்துவரும் கடும் மழையினால் யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள தனியார் மண்வீட்டில் வெள்ளம் புகுந்ததினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தாழ்ந்த பகுதியில் உள்ள இந்த வீட்டைச் சுற்றி மதில்கள் மற்றும் காணிகள் உயர்த்தப்பட்டமையால் வெள்ளம் வடிந்தோட இடமில்லாதே வெள்ள நீர் வீட்டினுள் புகுந்துள்ளது.
வெள்ளநீர் வீட்டினுள் புகுந்தமையால் வீட்டில் உள்ளவர்கள் தங்குவதற்கு பெரும் கஸ்டமான நிலமையை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்து இன்று இரவும் மழை பெய்யுமாக இருந்தால் தாழ்ந்த நிலப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் கஸ்டங்களுக்கும் உள்ளாகும் நிலைமை எற்படலாம்.


8 minute ago
38 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
38 minute ago
3 hours ago
3 hours ago