Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முஸ்லிம் மஜ்லிஸ் முதல் தடவையாக ஏற்பாடு செய்திருக்கும் இஸ்லாமிய கலைவிழா, நாளைய தினம் அதிபர் ஏ.மு.கணபதிப்பிள்ளை தலைமையில் கலாசாலையின் ரதி லஷ்மி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. விழாவின் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் கலந்துகொள்ளவுள்ளார்.
சுமார் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆசிரிய, மாணவர்கள் இங்கு பயிற்சி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இரண்டு அமர்வுகளாக இடம்பெறும் நிகழ்வில் முதல் அமர்வு மு.ப. 10.30 – 12.00 மணி வரையும் இரண்டாம் அமர்வு பி.ப. 1.30க்கு ஆரம்பமாகி 5 மணிவரை இடம்பெறவுள்ளது.
முதல் அமர்வில் மார்க்கச் சொற்பொழிவும் மாற்றுமத சகோதரர்களுக்கான கேள்வி பதிலும் இடம்பெறவுள்ளது. இரண்டாம் அமர்வில் தமிழ் விசேடதுறை மாணவி சுஜானாவின் “செதுக்கப்படாத சிற்பங்கள்” எனும் கவிதை நூல் வெளியீடும் இடம் பெறவுள்ளது சிறப்பம்சமாகும். தொடர்ந்து இஸ்லாமியக் கலாசார நிகழ்ச்சிகள் பல இடம்பெறவுள்ளது என்று முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் முஹம்மது பிலால் தெரிவித்தார்.
9 minute ago
39 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
39 minute ago
3 hours ago
3 hours ago