2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பளை பொலிஸாரின் நடமாடும் சேவை

Super User   / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம் )

தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான நடமாடும் சேவை இன்று தெல்லிப்பளை பொலிஸாரின் ஏற்பாட்டில் மல்லாகம் மகா வித்தியாலயத்தில்  நடைபெற்றது.

 இதில் வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் நெவில் மகேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

   பிரதம விருந்தினர். உட்பட ஏனைய பொலிஸ் அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் தெல்லிப்பளை கோட்ட கல்விப் பணிப்பாளர் கைலாயநாதன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் வங்கி முகாமையாளாகள் வைத்தியர்கள் உட்பட ஏனையவாகள் மல்லாகம் சந்தியில் இருந்து ஊர்வலமாக மல்லாகம் மகாவித்தியாலய மாணவாகளின் பாண்ட் வதத்தியத்துடன் அழைத்துவரப்பட்டார்கள்   
  தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

fdg


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X