Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
ஆசிரிய உதவியாளர்களாகக் கடந்த வருடம் நியமனம் பெற்றவர்கள் நேற்றுக் காலை கோப்பாய் கல்வியியல் கல்லூரிக்கு முன்பாக புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழமையாக ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரிய பயிற்சி கலாசாலைக்கு தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் ஆசிரிய சேவையினுள் முழுமையாக இணைத்துக் கொள்ளப்படுவர்.ஆனால் இம்முறை அந்த நடைமுறைக்கு மாறாக கல்வியல் கல்லூரியில் தொலைக்கல்வி நெறிக்கு இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதனால் வாரத்தில் 7 நாள்களும் கடமை புரிய வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டது.
எனவே, தாம் இவ்வாறு பாதிக்கப்படுவது குறித்து வெளிப்படுத்தவும், தொலைக்கல்விக்கு பதிலாக தம்மை ஆசிரிய பயிற்சி கலாசாலைக்கு அனுமதிக்கக் கோரியுமே ஆசிரிய உதவியாளர்கள் 400 பேர் நேற்று புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இவர்களின் போராட்டம் காரணமாக நேற்று ஆரம்பிப்பதாக இருந்த குறித்த கற்கைநெறி 23ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாம் ஆசிரிய பயிற்சி கலாசாலைக்கு அனுமதிக்கப்படும் வரை புறக்கணிப்புத் தொடரும் என்று ஆசிரிய உதவியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
38 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
38 minute ago
3 hours ago
3 hours ago