2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வறுமையால் பாடசாலையைவிட்டு விலகும் மாணவர் அதிகரிப்பு – யாழ். அரச அதிபர்

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 altயாழ். மாவட்டத்தில் வறுமை காரணமாக பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்கள் சிறுவயதிலேயே கல்வியை இழந்துள்ள நிலையில் சட்டத்துக்கு மாறாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் 278 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விட்டு விலகியுள்ளனர். இதற்கு அவர்களின் வறுமையே பெரும்பாலும் காரணமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களும் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவும் இணைந்து நேற்று நடத்திய சிறுவர் தின நிகழ்வில் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
இதில் அவர் மேலும் உரையாற்றுகையில்:

குழந்தைகள் பாதிப்படைவதற்குப் பெற்றோர்களே முதற் காரணிகளாக உள்ளனர். இதுவரை 77 பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஒரு சமூகத்தில் பொறுப்பான இடங்களில் உள்ளவர்களாலேயே இவ்வாறான தவறுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிள்ளைகள் சரியான முறையில் வழிநடத்தப்படவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் விடயத்தில் கண்டும் காணாதது போல் இருந்துவிடாது மிகவும் கவனமாகப் பிள்ளைகளைக் கையாழுதல் வேண்டும்.- என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X