Super User / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வசாவிளான் மகாவித்தியாலயம் இன்று சொந்த இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மஹிந்த கத்துருசிங்க இதில் கலந்து கொண்டு பாடசாலைக் கல்விச் செயற்பாடகளை ஆரம்பித்து வைத்தார்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இப்பாடசாலை கடந்தமாத இறுதியில் பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டபோதும் கட்டடங்கள் எவையும் அற்ற நிலையில் பாடசாலையை அங்கு தொடர்ந்து இயக்க முடியாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் கட்டடங்கள் ஓரளவு புனரமைக்கப்பட்ட நிலையில் இன்று சொந்த இடத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
46 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
3 hours ago
3 hours ago