Super User / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் பாரியளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் உபுல் பிரேமரத்தின தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு ஒன்று இன்று முற்பகல் 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள திலக் விடுதியில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இவ்விடயம் குறித்துத் தெரிவிக்கையில்:
நாம் நேற்றுக் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து அங்கு காணாமல் போனவர்கள் தொடர்பான விவரங்களை எடுத்துக்கொண்டோம்.
யாழ்ப்பாணத்திலும் அவர்கள் தொடர்பான விவரங்களை எடுக்கவுள்ளோம்.
இதன் தொடர் நடவடிக்கையாக காணாமல் போனவர்களின் விவரங்களை வெளியிடக் கோரியும் அவர்களின் நிலை தொடர்பாக அறியத்தரக் கோரியும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படவுள்ளன.
அதுமட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. – என்றார்.
10 minute ago
40 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
3 hours ago
3 hours ago