2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இறந்த குழந்தையை எவருக்கும் அறிவிக்காது புதைத்த தாயார் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி)

பிறந்து 23 நாளாகிய நிலையில் இறந்த குழந்தையை கிராமசேவகருக்கோ பொலிஸாருக்கோ எதுவித அறிவித்தலும் வழங்காத நிலையில் புதைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த குழந்தையின் தாயாரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வடமராட்சி, வல்வெட்டி என்னும் இடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவந்துள்ளதாவது:

குழந்தை பிறந்து 23 நாள்களில் நேற்று இறந்துள்ள நிலையில் குறித்த சம்பவத்தை  எவருக்கும் அறிவிக்காது குழந்தையை புதைத்துள்ளனர்.
 
இதனால் சந்தேகமுற்ற அயலவர்கள்  கிராமசேவகர் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, இறந்த குழந்தையின் தாயாரை பொலிஸார் உடனடியாகக் கைதுசெய்து இன்று பருத்தித்துறை நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி, புதைக்கப்பட்ட குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் தாயாரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X