A.P.Mathan / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ்)
இலங்கை அரசாங்கம் எந்தவொரு மாவட்டமும் தனித் தமிழ் மாவட்டமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. இதற்கேற்ப திட்டமிடப்பட்ட வகையில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவி வருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் தொகுதிக்கான செயற்குழு அங்குரார்ப்பண நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்படி கருத்தினை தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் தொகுதிக்கான செயற்குழு அங்குரார்ப்பண நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
இதன்போது செயற்குழு தெரிவு இடம்பெற்றது. இதில் ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இ.சந்திரன் தலைவராகவும்இ உபதலைவர்களாக நீர்வேலியைச் சேர்ந்த க.தர்மலிங்கம் (து.P), உரும்பிராயைச் சேர்ந்த க.தியாகராஜா, வாதரவத்தையைச் சேர்ந்த மா.இரட்ணசிங்கம் ஆகியோரும் கல்வியங்காட்டினைச் சேர்ந்த ஞா.த.ஞானசேகரவேல் செயலாளராகவும்இ அச்செழுவினைச் சேர்ந்த திருமதி ச.சரோஜினிதேவி உப செயலாளராகவும் நீர்வேலியினைச் சேர்ந்த க.துரைசிங்கம் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாக உறுப்பினர்களாக த.நித்தியானந்தம் (அச்சுவேலி), ப.சித்திரா (ஆவரங்கால்), கா.சிவசோதி (ஆவரங்கால்), சி.ரமேஸ் (சிறுப்பிட்டி), செ.செந்தூரன் (குட்டியபுலம்), கி.தங்கவடிவேல் (இருபாலை), சி.இலட்சுமிகாந்தன் (கட்டைப்பிராய்), சு.சுப்பிரமணியம் (நீர்வேலி வடக்கு), ப.இராசேந்திரம் (ஊரெழு), ஆ.சச்சிதானந்தன் (நீர்வேலி), ம.அன்டன்குமார் (உரும்பிராய்), சோ.இராசலிங்கம் (ஆவரங்கால்), வை.சுப்பிரமணியம் (கோப்பாய்), அ.கணபதிப்பிள்ளை (தம்பாலை) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிகழ்வில் தலைமையுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்...
இலங்கை அரசாங்கம் எந்தவொரு மாவட்டமும் தனித் தமிழ் மாவட்டமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. இதற்கேற்ப திட்டமிடப்பட்ட வகையில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவி வருகின்றது. யாழ்ப்பாண புகையிரதநிலையத்தில் நூற்றைம்பது சிங்கள மக்கள் கொண்டுவந்து விடப்பட்டுள்ளனர். இவர்கள் வரமுன்னரே புகையிரத நிலையத்தில் அவர்களுக்கான மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுவிட்டன. அரசாங்கம் உலகத்தில் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, தான் நினைத்ததை செய்து முடிக்கவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் தமிழ் மண்ணையும் மக்களையும் காக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே சுமத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று போரால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொடுக்கவேண்டிய கடப்பாடும் எங்கள் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சூழலைப் பொறுத்தவரையில் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட ஓரளவிற்காவது தமிழ் மக்களுக்குச் சாதகமாகவே உள்ளது. இந்தச் சூழலை எமக்குச் சாதமாகப் பயன்படுத்தி எமக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு பதின்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் போதாது.
எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இன்று (நேற்று) கோப்பாய் தொகுதி செயற்குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்குகொண்டு கருத்துத் தெரிவித்த சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தனதுரையில்...
கடந்த 30ஆண்டுகால ஆயுதப் போராட்டம் அளவிடமுடியாத அர்ப்பணிப்புக்களுடனும் தியாகங்களுடனும் முன்னெடுக்கப்பட்டு உலகத்தை எம்பக்கம் பார்க்கவைத்துள்ளது. இந்நிலையில் நடைபெற்றுமுடிந்த போராட்டம் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தீர்வினை நோக்கிப் பயணிக்கவேண்டுமே அல்லாமல் முப்பது ஆண்டுகாலம் பின்நோக்கி நகர்ந்து காலத்தையும் கனிந்துவரும் சூழலையும் வீணடிப்பது வரலாற்றுத் துரோகமாகும். எனவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவரும் கூட்டமைப்பின் வீச்சினை மேம்படுத்த அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் கோப்பாய் தொகுதியினைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்கள் கூட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.
.jpg)
2 minute ago
37 minute ago
42 minute ago
xlntgson Saturday, 30 October 2010 08:31 PM
போராட்டம் போராட்டம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே!
தெற்கில் சிங்களவர் மத்தியில் தமிழர் வாழ்வது போன்று வடகிழக்கில் சிங்களவர் வாழலாம். ஆனால் நீங்கள் கூறுவது போன்று குடியேற்றத்தால் தமிழர் பெரும்பான்மை மாற்றி அமைக்கப்படுமேயானால் அது தெரியாமல் போகாதல்லவா?
இதைப்பற்றி நான் ஆங்கில இணையமொன்றில் சமுசயப்பட்ட போது துரோகி என்று ஏசப்பட்டேன்.
ஆனால் அவ்வாறு நடவாது என்று சில உத்தரவாதங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
எது எப்படியாக இருந்தாலும் அவ்வாறான அநீதிகள் இழைக்கப்படக்கூடாது என்பது உலக அரங்கில் ஏற்புடைய கூற்று.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
37 minute ago
42 minute ago