2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். நூலகத்திற்குள் சுற்றுலாப் பயணிகள் திரளாக சென்று பார்வையிட அனுமதி மறுப்பு?

Super User   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாண பொது நூலகத்திற்குள் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் திரளாக சென்று பார்ப்பதற்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நூலகத்திற்கு முன்னாள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் சுற்றுலாப் பயணிகள் திரளாக நூலகத்திற்குச் செல்வதை தடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த வாரம் யாழ். நூலகத்தை பார்வையிடுவதற்குச் சென்ற தென்னிலங்கையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நூலகத்திற்குள் அனுமதிக்கப்படாதையடுத்து சுற்றுலாப் பயணிகளால் குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டது.

மேற்படி சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கை குறித்து தமிழ் அரசியல் கட்சிகளின் தரப்பிலும் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நூலகத்தை பார்வையிட திரளாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வீதியிலேயே தடுக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவிடம் தமிழ் மிரர் இணையத்தளம் கேட்டபோது, இது குறித்த புகார்கள் கிடைத்திருப்பதாக கூறினார். 

தான் கொழும்பில் இருப்பதால் இது பற்றி முழுமையாக அறிய முடியவில்லை எனவும் இது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X