Super User / 2010 நவம்பர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
நல்லூர் பிரதேச செயலகத்துக்கென அமைக்கப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழாவும் ஊருணி நூல் வெளியீட்டுவிழாவும் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பருத்தித்துறை வீதி நல்லூரில் இடம்பெறவுள்ளன.
நல்லூர் பிரதேச செயலர் பா. செந்தில்நந்தனன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யூ. டி. ஜோன் செனவிரட்ண, சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்வர்.
நூல் வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சி. சிவலிங்கராஜா நிகழ்த்த, மதிப்பீட்டுரையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் கலாநிதி செ. திருநாவுக்கரசு நிகழ்த்துவார்.
3 minute ago
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
38 minute ago
43 minute ago