Super User / 2010 நவம்பர் 09 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
காலிமுகத்திடலில் சந்தேகத்துக்கு இடமான முறையிலும் அனுமதியில்லாமலும் புகைப்படம் எடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரசடி வீதி கந்தர்மடத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் பகீதரன் (வயது17) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கோட்டிஅ பொலிஸாரால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புதிய மகஸீன் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
34 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago