2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்.மாவட்ட இசுறு பாடசாலைகள் வேலைதிட்டத்தை ஆரம்பிக்க அரசு அனுமதி

Kogilavani   / 2010 நவம்பர் 30 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.மாவட்டத்தில் இசுறு பாடசாலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 பாடசாலைகளின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிப்பதற்கான அனுமதியை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிக்கையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுடன் கல்வி அமைச்சினால் இசுறு பாடசாலைத்திட்டத்தில்  கீழ் யாழ். மாவட்டத்தில் 5 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.

இதில் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின் அபிவிருத்திப் பணிகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் யாழ். புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி, வரணி மகாவித்தியாலயம்,  சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரி,  சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆகிய 4 பாடசாலைகளுக்கான அனுமதி கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 4 பாடசாலைகளின் முதற் கட்டப்பணிகள் 66.509 மில்லியன் ரூபாய் பணியில் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே மேற்படி நான்கு பாடசாலைகளும் தமது அபிவிருத்திப் பணிகளை உடன் ஆரம்பிக்குமென அவர் குறிப்பிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X