Menaka Mookandi / 2010 நவம்பர் 30 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
மத்திய சுகாதார அமைச்சினால் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ். மாவட்டத்திலும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் தீவிரமாக அனுஷ்டிக்கப்படுவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தில் டெங்கு பரப்பும், நுளம்பு பெருகும் பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பார்வையிட்டு டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்தல், சகல அரசசார்பற்ற நிறுவனங்கள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், வீடுகள், குடியிருப்புக்கள், நகரப் பகுதிகள், மயானங்கள், பராமரிப்பின்றியுள்ள காணிகள், வீடுகள், சமய வணக்கஸ்தலங்கள் போன்ற இடங்களில் நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அழிக்க நடவடிக்கை எடுத்தல்.
சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுப் பரிசோதகர்கள் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளினை ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்தல் வேண்டும். மத்திய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக ஒவ்வொரு பிரதேச பொலிசாரும், இராணுவத்தினரும் வேண்டிய ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.
ஒவ்வொரு பிரதேச டெங்குக் கட்டுப்பாட்டுக் கட்டுப்பாட்டுக் குழுவும் பிரதேசத்தைச் சுற்றிப் பார்வையிட்டு டெங்கு தடுப்பு செயற்பாடுகள் திருப்திகரமாகவும், பூரணமாகவும் இடம்பெற்றதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
டெங்கு தடுப்பு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் காணப்படும் நிறுவனத் தலைவர்களுக்கு அல்லது வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். எனவே யாழ் மாவட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து டெங்கு தடுப்பு வாரத்தில் டெங்கு தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து எமது
மக்களை ஆடகொல்லி டெங்கு நோயிலிருந்து பாதுகாப்போம்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago