2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நைனாதீவில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 30 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

மனித உரிமை ஆணைக்குழுவின் கீழுள்ள உள்ளக இடம்பெயர்ந்தோர் செயற்திட்டத்தின் கீழ் நைனாதீவில் நடமாடும் சேவையொன்று இன்று நடத்தப்படவுள்ளது.

இந்த சேவையில் இப்பகுதியில் கடமையாற்றுகின்ற தொண்டு நிறுவனங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான அறிமுகங்களும், கடமைகள் தொடர்பாகவும், மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு இனங்காணப்படவுள்ளன.

நைனாதீவு அமுத சுரபி மண்டபத்தில் காலை 10 மணிமுதல் 2 மணிவரை நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு மனிதஉரிமைகள் ஆணைக்குழு, சட்ட உதவி ஆணைக்குழு, பிரதேச செயலக அதிகாரிகள், உள்ளுர் ஆட்சி அதிகாரிகள், வலயக்கல்வி அதிகாரிகள், பொலிஸ் கடற்படை அதிகாரிகள், சகாதார வைத்திய அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X