Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மாற்று வலுவுள்ளோர் தினத்தை முன்னிட்டு, யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் நடத்தும் நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இல. 5, பழைய பூங்கா வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் எனும் இடத்தில் அமைந்துள்ள யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திலேயே இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக செயலர் திரு. ந.சிவநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொள்கிறார்.
இந்நிகழ்வில், வரவேற்புரையை யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக செயலர் திரு.ந.சிவநாதனும் தலைமையுரையை யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் டொக்டர் திருமதி ஜெ.கணேசமூர்த்தியும் பிரதம விருந்தினர் உரையை யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் பயனாளி ஒருவரும் நன்றியுரையை யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் பகுதி முகாமையாளர் ஜோன்சனும் ஆற்றவுள்ளனர்.
இதனையடுத்து, கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், குறுந்திரைப்படக்காட்சி, கண்காட்சி போன்றனவும் நடைபெறவுள்ளன.
'சுயாதீன மாற்றத்திற்கு உட்படுத்தல் ஊடாக வலுவிழந்தோரை வலுப்படுத்தல்' என்னும் தலைப்பில் கலந்துரையாடலொன்றும் நடைபெறவுள்ளது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago