A.P.Mathan / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை 6 மணியளவில் மீடகப்பட்டுள்ளது.
சுமார் 50 முதல் 55வயதுக்கிடைப்பட்ட ஆணின் சடலம் என யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் மேற்படி சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பயணிகள் தரிப்பிடத்திற்கருகில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் நேற்றிரவு மரணமாகியிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள யாழ். நீதிமன்ற நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago