2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் மீண்டும் டெங்குநோய் பரவும் அபாயம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் மீண்டும் டெங்குநோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்குநோய் அறிகுறியுடன் அதிகமான பொதுமக்கள் சிகிச்சை பெற வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த புதன்கிழமை குருநகரைச் சேர்ந்த 12 வயது சிறுவனொருவன் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்ததுடன், இவ்வருடத்தில் டெங்குநோயினால் உயிரிழந்தவர்களின் தொகை 25ஆகுமென யாழ். மாவட்ட தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


மழைக்காலம் என்பதால் மீண்டும் டெங்கு தாக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நோய் தாக்கத்திற்குள்ளாகிய நிலையில் நாளொன்றுக்கு மூவர்ப்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X