Menaka Mookandi / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
2011ஆம் ஆண்டு முதல் யாழ். மாநகரசபையினால் புதிய வரிகளை அறவிடப்படவுள்ளதாக யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'யாழ் மாநகரசபையானது 1980ஆம் ஆண்டிற்குப் பின் எந்தவித வரி அதிகரிப்புமின்றி சேவையாற்றி வருகிறது. இனிவரும் காலத்தில் யாழ். நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக யாழ் மாநகரசபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிகளை அதிகரிக்கவுள்ளது.
குறிப்பாக சோலைவரி, விளம்பரக்கட்டணம், வியாபார உரிமம், கழிவகற்றல் கட்டணம், மண்டப வாடகை, கட்டிட விண்ணப்பப்படிவம், வாகனம் நிறுத்தற் கட்டணம், நீர்க்கட்டணம், வாடகை, நல்லூர் திருவிழா, களியாட்ட வரி, பொது நூலகத்தைப் பார்வையிடுவோருக்கான கட்டணம், பூங்காக் கட்டணம் என்பன அறவீடு செய்யப்படவுள்ளன.
இவ்வாறான வரி அதிகரிப்பின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு யாழ். நகர் அபிவிருத்தி செய்யப்படும். வரி அதிகரிப்புத் தொடர்பாக பொதுமக்களுக்கு 3 பிரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும்' அவர் கூறினார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025