Kogilavani / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
சர்வதேச எழுத்தாளர் மாநாட்டையொட்டிய தகவல் அரங்கு யாழ் நாவலர் மண்டபத்தில் நேற்று மாலை மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலர் லெ.முருகபூபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்தும் அதில் கலந்து கொள்வோர் விபரங்கள் குறித்தும் எழுத்தாளர் லெ.முருகபூபதி விளக்கினார்.
மாநாடு தொடர்பான நடைமுறைகளை மாநாட்டுக்கான பொருளாளரும் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபருமான பூ.சிறிதரசிங் தெளிவாக்கினார்.
இந்த நிகழ்வில் புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்திருந்த படைப்பாளிகள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெருமளவான படைப்பாளிகளும் ஊடகத்துறையினரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை வடமராட்சியிலும் இந்த தகவல் பரிமாற்ற அமர்வு நடைபெற்றுள்ளது.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025