Kogilavani / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய சுற்றாடலில் குடிகாரர்களின் அட்டகாசம் மிக மோசமடைந்துள்ளதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பாடசாலைக்கு முன்னால் உள்ள மரங்களின் கீழ் இளைப்பாறும் குடிகாரர்கள் மதுபோத்தல்களைக் கொண்டு வந்து வெளிப்படையாகவே அங்குவைத்துக் குடித்து விட்டு அருகில் உள்ள குளத்தில் போத்தல்களைப் வீசுகின்றனர்.
பின் போதையேறியதும் அந்த இடத்திலேயே உறங்குவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக எவராவது தட்டிக் கேட்க முற்பட்டால் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பயத்தின் காரணமாக பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பாடசாலையில் காலை வேளையில் கொண்டு விடுவதும், பின் பாடசாலை முடியும் வரை காத்து நின்று அழைத்துச் செல்வதாகவும் கூறுகின்றனர்.
எனவே இவ் விடயம் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025