Menaka Mookandi / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வில்லூன்றிப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைத்தல் மற்றும் அப்பகுதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வில்லூன்றி மயானத்திற்கு அண்மையாகவுள்ள பகுதியில் நட்சத்திர விடுதியொன்றை அமைப்பது தொடர்பாகவும் அப்பகுதி அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
மலேசியத் தனியார் நிறுவனமொன்று நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க எதிர்பார்ப்பு கொண்டுள்ளதாகவும் அதற்கு அப்பகுதி மக்களது ஒத்துழைப்பையும், ஒத்தாசையையும்தான் முக்கியமானவை என்று தெரிவித்த அமைச்சர் மக்களின் விருப்பத்திற்கும் நலன்களுக்கும் மாறாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டார்.
முக்கியமாக சுகாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு மயானத்தில் சடலத்தை எரிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் புகைமூலம் மக்களுக்கு எதுவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் புகைபோக்கி உயரமாக அமைக்கப்பட வேண்டுமென்பதுடன் அங்குள்ள விளையாட்டு மைதானம் பொதுவான மலசல கூடங்கள் அமைக்கப்படுவதுடன் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வகையிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் முகமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இச்சந்திப்பில் யாழ் பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரன், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ் மாநகர ஆணையாளர் சரவணபவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025