2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடக்கில் தெங்கு பயிர்ச் செய்கையை துரித கதியில் முன்னெடுக்க நடவடிக்கை

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாணத்தில் தெங்கு பயிர்ச் செய்கை சிறப்பான முறையிலும் துரித கதியிலும் முன்னெடுக்கப்படுமென தென்னை அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற தெங்கு பயிர்ச் செய்கையாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தின் பின்னர் நான் மேற்கொண்ட முதலாவது பயணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வந்துள்ளேன். யாழ். மாவட்டத்தில் தெங்கு பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.

கடந்த காலப் போரின்போது இங்குள்ள தென்னை வளம் பாரியளவில் அழிந்துள்ள நிலையில் அவற்றை மீள் அபிவிருத்தி செய்ய வேண்டிய பாரிய பணி எமது அமைச்சைச் சார்ந்துள்ளது என்றார்.

நிகழ்வில் உரைகளை தென்னை பயிர்ச்செய்கை சபைத் தலைவர் சரத் கீர்த்திரத்ன, வடபிராந்திய முகாமையாளர் மகாலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X