A.P.Mathan / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கடந்தகால தவறுகளையும் பாடங்களையும் மனதில் கொண்டு எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளும் விதத்திலும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டும் யாவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் தெரிவித்தார்.
சங்கானை நிச்சாமத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சங்கானை அபிவிருத்திச் சங்கத்தின் 33ஆம் ஆண்டு நிறைவு விழாவும் புதிய மின்மாற்றித் திறப்பு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: கடந்த கால யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தற்போது சுதந்திரமானதொரு சூழல் நிலவுகின்றது. இக்காலகட்டத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதான நல்லதொரு சந்தர்ப்பமும் உருவாகியுள்ளது.
தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து எமது மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளமுனையும் அதேவேளை அண்மையில் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இணைய முற்படுகின்றது.
எனவே கடந்த கால தவறுகளையும் பாடங்களையும் மனதில் கொண்டவர்களாக எமது மக்களுக்கான வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து மனச்சுத்தியுடன் உழைக்க வேண்டும்.
அதன் மூலமே புதியதொரு வாழ்வை நோக்கி பயணிக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக நிச்சாமம் பகுதியில் அமைக்கப்பெற்ற புதிய மின்மாற்றியின் செயற்பாடுகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து அங்கிருந்து மங்கல வார்த்திய முழக்கம் சகிதம் நிச்சாமம் ஞான வைரவர் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டு அமைச்சர் சிறப்பு பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
அங்கு அமைக்கப்பட்ட அரங்கில் அளவெட்டி அருணாசலம் வித்தியாலய அதிபர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரைகளை சங்கானை பிரதேச செயலர் திருமதி பாபு, இலங்கை மின்சார சபை பிரதேச பொறியியலாளர் ஞானகணேசன், பிரதேச சபை செயலாளர் புத்திரசிகாமணி ஆகியோர் நிகழ்த்தினர்.
சிறப்புரையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்த்தினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
10 minute ago
5 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
5 hours ago
22 Dec 2025