2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி வல்லுறவின் பின்னரே கொல்லப்பட்டுள்ளார்'

Super User   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

பருத்தித்துறை புலோலிப் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட  யுவதி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலோலி தெற்கு தேரன் பகுதியைச் சேர்ந்த அரியநாயகம் துளசி (வயது 19) என்ற யுவதி கடந்த மாதம் 28 ஆம் திகதி காணாமற்போயிருந்த நிலையில் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி அவருடைய வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்தயுவதியின் சடலம் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கிணங்க நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த யுவதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டிருந்தாரென்றும் இவரது இடை உட்பட உடலின் பல பாகங்களில் காயங்கள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X