2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உடுவில் பிரதேசத்தில் சுகாதார கழக அங்குரார்பண கூட்டம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

உடுவில் பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையின் எற்பாட்டில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதாரக் கழக அங்குரார்பணக் கூட்டம் வெள்ளிக்கிழமை பகல் 10.00 மணிக்கு உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி அ.ஜெயக்குமார் தலைமையில் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் இடம்பெறவுள்ளது.

தற்போது வேகமாக மாறிவரம் உலகில் பல்வேறு சுகாதார மாற்றங்கள் மற்றும் பிரச்சனைகளும் உருவாகி வருகின்றன. மக்கள் மத்தியில் சுகாதாரம் சம்பந்தமான விடயங்களை விரைவாக எடுத்துக் கூற வேண்டிய அவசியமும் அதேவேளை மக்களை சுகாதார விழப்புடையவாகளாக வைத்திருக்க வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது.

மக்களிடையே சுகாதார அறிவுறுத்தல்களை வழங்கி நல்லதொரு சமுதாய சூழ்நிலையை உருவாக்கும் நோக்குடன் இந்தக் சுகாதாரக் கழகம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X