2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் புதிய சிறைச்சாலைக்கான நிர்மாணப் பணிகள் அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பிரதேசத்தில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள்  அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வா தெரிவித்தார்.

இதற்கான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்தும் முகமாகவே இந்தப் புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சுமார் 225 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X