A.P.Mathan / 2010 டிசெம்பர் 24 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யாழ். மாநகர சபையின் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கும் எதிர்காலத்தில் அது எடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றது.
மாநகர சபைக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், எதிர்காலத்தில் மாநகர சபை வருமானத்தை பெருக்கிக் கொள்வது தொடர்பில் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அதுசார்ந்த நிறுவனங்கள் ஊடாக வருவாயை பெற்றுக் கொள்வதிலும், அதன்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேர்மைக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு உங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்கு கட்டுப்படாதுவிடின் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
எதிர்வரும் 13ஆம் திகதியன்று இதுவிடயம் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெறும் என்றும் அதற்கு மாநகர சபை ஆணையாளர் சரவணபவ தலைமையில் 15 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து குறித்த விடயம் தொடர்பில் அக்குழு ஆராய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகர சபைக்கு வழங்கப்பட்ட மழைக் கவசங்களை பயனாளிகளுக்குக் கையளித்தார்.
இக்கலந்துரையாடலில் யாழ். மாநகர சபையின் துறைசார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாநகர ஆணையாளரும் தற்போதைய கிழக்கு மாகாண பிரதம செயலாளருமான பாலசிங்கம் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025