A.P.Mathan / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

வதிரி பூவற்கரைப் பிள்ளையார் வீதியில் அமைந்துள்ள வதிரி தோற்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கு இன்று விஜயம் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அங்கு பயிற்சிநெறிகளை முடித்துக்கொண்ட தொழில் முயற்சியாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பாதணி கைத்தொழில் துறையில் நான்கு மாதம் பயிற்சிபெற்ற இவர்களுக்கான பயிற்சிக்காலத்து மாதாந்த ஊதியம் அமைச்சரினால் மகேஸ்வரி நிதியத்தின் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்த நிலையில் பயிற்சியின் பின்னர் தங்களது தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காக இத்தொழில் முயற்சியாளர்கள் தங்களுக்கு தொழில்சார் உபகரணங்களும் முதற்தடவைக்கென மூலப் பொருட்களும் தேவை என அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதனை கருத்திற் கொண்ட அமைச்சர் வெகுவிரைவில் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
அத்துடன் இத்தொழிற்துறை சார்ந்த உற்பத்தி இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பயிற்சிகளைப் பெறுவவதற்காக இருவரை கொழும்பிற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுக்கு உரிய பயிற்சி காலத்தின்போது தங்குமிட வசதிகளையும் உணவு வசதியினையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அத்துடன் மேற்படி சங்கத்தின் நிர்வாகத்தை மாற்றி அமைப்பதற்கும் பொதுமுகாமையாளர் ஒருவரையும் விற்பனை முகவர் ஒருவரையும் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இதே நேரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிகளைப் பாராட்டி விசேட பொதுக் கூட்டமொன்று நடாத்தப்பட்டதுடன் அமைச்சருக்கு பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.
அத்துடன், உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு தென்னிலங்கையில் இருந்து வந்து பயிற்சிகளை வழங்கிய இருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினாலும் பயிற்சி பெற்றவர்களாலும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago