2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒளிவிழாவை அரசியல் விழாவாக மாற்ற முயற்சி; யாழ். மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 26 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகரசபையின் ஒளிவிழாவை அரசியல் விழாவாக நடத்துவதற்கு முன்னிலைப்படுத்தப்படுவதால், அந்நிகழ்வை புறக்கணிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக யாழ். மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ். மாநகரசபையின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நாளை திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் உறுப்பினர் கா.ந.விந்தன் கனகரத்தினம் தலைமையில் நடைபெற்றபோது, எதிர்வரும் 29ஆம் திகதி ஒளிவிழாவாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. பின்னர் எவருக்கும் அறிவிக்கப்படாது இந்நிகழ்வு நடைபெறுவதற்கான திகதியும் (நத்தார்) ஒளிவிழா என்ற பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதாகத் தீர்மானித்திருந்தபோதிலும், பின்னர் அவர்களின் பெயர் அழைப்பிதழிலிருந்து நீக்கப்பட்டு அதனை அரசியல் விழாவாக நடத்துவதற்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.

எனவே, மேற்கூறிய காரணங்களால் இந்நிகழ்வை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாநகரசபை உறுப்பினர்களாகிய  நாம் புறக்கணிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம் என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X