Menaka Mookandi / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மனித உரிமை நிலையம் நடத்தும் இலவச நடமாடும் சட்ட சேவை இன்று திங்கட்கிழமை காலை 11 மணிக்கு உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு உதவித்திட்டப் பணிப்பாளர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் உரிமைப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நடமாடும் சேவையில் காணி உறுதி இழந்தோர், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் பற்றி அறிதல், காணாமற்போனோர் பற்றிய தகவல்களைப் பெறுதல், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் உரிமைகளைப் பற்றி அறிதல், அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பாக அறிதல், விவாகரத்து பெறுதல், தாபரிப்புப் பணம் பெறுதல், தொழில் தொடர்பான பிரச்சினைகளிற்குத் தீர்வு பெறுதல், விபத்து நஷ்டஈடு பெறுதல், இறப்பு பிறப்பு, திருமண சான்றிதழ் பெறுதல், பணக் கொடுக்கல் வாங்கல் சர்ச்சைகள், சமூகத்தில் காணப்படும் துர்ப்பாக்கிய நிலைமைகளை அகற்றுதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் இதன்போது தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago