2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வலிகாமம் கல்வி பணிப்பாளர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த வலிகாமம் பிறதி கல்விப்பணிப்பாளரான மார்க்கண்டு சிவலிங்கம் (வயது 55) நேற்று நள்ளிரவு இனந்தெரியாத ஆயுதத் தாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதக் குழு வீட்டிலுள்ள தங்க நகைகளை கேட்டு ஆயுத முனையில் மிரட்டியுள்ளனர்.

தங்க நகைகளை அவர் வழங்கியப்பின் ஆயுதக் குழுவினர் அவரது மகளை பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளனர். அதனை தடுப்பதற்கு முயன்றபோதே கல்விப் பணிப்பாளர் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவரது சடலம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கான வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X